குப்பை மேடுகள் பூங்காவாக மாற்றும் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை மேடுகள் பூங்காவாக மாற்றும் பணி

Added : நவ 11, 2018
Advertisement
 குப்பை மேடுகள் பூங்காவாக மாற்றும் பணி

நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் தகவல்

சிதம்பரம்:'கடந்த காலங்களில் நகராட்சி குப்பை கிடங்குகளில் குப்பை மேடு உள்ள பகுதிகளை சமன் செய்து பொழுது போக்கு பூங்காவாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என நகராட்சிகளில் நிர்வாக ஆணையர் பிரகாஷ் கூறினார்.சிதம்பரத்தில் பாதாளசாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பிரகாஷ் தலைமை தாங்கினார். பாண்டியன் எம்.எல்.ஏ., சப்கலெக்டர் விசு மகாஜன், நகராட்சி கமிஷனர் சுரேந்தர்ஷா, நகராட்சி மண்டல இயக்குனர் இளங்கோவன், மண்டல பொறியாளர் முருகேசன், நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் செந்தில்குமார், குமார் பங்கேற்றனர்.கூட்டத்தில், கடந்த 2016ம் ஆண்டு துவங்கிய பாதாள சாக்கடை விரிவாக்கத்திட்டத்தை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு சேதமான சாலைகளை ஜனவரி மாத இறுதிக்குள் போட வேண்டும்.குப்பைகளை நுண் உரம் தயாரித்தல் மேலாண்மை திட்டத்தினை நடைமுறைப்படுத்தி குப்பையில்லா பூங்கா நகரமாக மாற்றுவது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வீராணம் ஏரியிலிருந்து சிதம்பரத்திற்கு புதிய நீரேற்று நிலையம் 50 கோடி ரூபாயில் அமைப்பது.மேலும், வக்காரமாரி ஏரியை துார்வாரி அதிக தண்ணீர் தேக்குவதற்கான பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தினைத் தொடர்ந்து, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், 'கடந்த காலங்களில் நகராட்சியில் அள்ளப்படும் குப்பைகள் குப்பை கிடங்கு அமைத்து கொட்டப்பட்டது. அந்த குப்பை மேடு உள்ள பகுதிகளை சமன் செய்து பொழுது போக்கு பூங்காவாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.செங்கல்பட்டு மண்டலத்தில் மட்டும் 19 நகராட்சிகளில், 250 இடங்களில் குப்பை மேடுகள் பொழுது போக்கு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.சிதம்பரத்தில், சப் கலெக்டர் விசுமகாஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து சாலைகள், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட இடங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து சீரமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது' என்றார்.எம்.எல்.ஏ., மனுபாண்டியன் எம்.எல்.ஏ., நகராட்சிகளின் நிர்வாக ஆணையரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு:சிதம்பரம் நகராட்சிக்கு மின்தகன மேடை சுடுகாடு புதிதாக அமைத்து தரவேண்டும். வீராணம் ஏரியிலிருந்து சிதம்பரத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக புதிய திட்டம் நடைமுறை படுத்த வேண்டும். வக்காரமாரி ஏரியை பாதுகாக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். சிதம்பரத்தில் பாதாள சாக்கடையை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X