'மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை'

கடலுார்:'கடலுார் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் உள்ளனர்' என மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர் கூறினார்.கடலுார் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவி வருவதையொட்டி; மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் நேற்று கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்குவால் சிகிச்சை பெறும் நோயாளிகள், வார்டு பாராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் இருப்பதாக அறிந்து ஆய்வு செய்ய வந்துள்ளேன். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.வார்டுகள் துாய்மையாக பராமரிக்கப்படுகிறது. இம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள் உள்ளனர். பற்றாக்குறை ஏதும் இல்லை.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை முதலுதவி சிகிச்சை அளித்து அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு அனுப்பி வைப்பது குறித்து விசாரிக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X