மணல் குவாரிக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணல் குவாரிக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மணல் குவாரிக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி

சேத்தியாத்தோப்பு:மிராளூரில் மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தங்கள் ீவீடுகளில் கருப்பு கொடியேற்றினர்.சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் வெள்ளாற்றில் அரசு மணல்குவாரி கடந்த மாதம் துவங்கி வெளி மாவட்டங்களுக்கு லாரியில் அனுப்பப்பட்டு வருகிறது.வெள்ளாற்றில் மிராளூர், சக்திவிளாகம் ஆகிய பகுதிகளில் கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்றின் கரை உடைந்து கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வி.சி., மற்றும் கம்யூ., கட்சி, கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருந்தும், மணல் குவாரி இயங்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X