'சம்திங்' வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் ஆயுத படைக்கு மாற்றம்: எஸ்.பி., அதிரடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சம்திங்' வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் ஆயுத படைக்கு மாற்றம்: எஸ்.பி., அதிரடி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேப்பூர்:வேப்பூர் அருகே 'சம்திங்' வாங்கிய இரண்டு போலீஸ்காரர்களை எஸ்.பி., ஆயுத படைக்கு அதிரடியாக மாற்றி உத்தரவிட்டார்.வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட 8ம் எண் நெடுஞ்சாலை ரோந்து (ைஹவே பேட்ரோல்) வாகனம் உள்ளது. இந்த வாகனம் மூலம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துக்கள், சந்தேகப்படும்படியான வாகனங்கள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை குறித்து கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில் எஸ்.பி., சரவணன் மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.வேப்பூர் அடுத்த தொண்டங்குறிச்சிக்கு வந்தபோது, 8ம் எண் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் இருந்த போலீசார் 'டாடா ஏஸ்' வேன் டிரைவரிடம் 'சம்திங்' வாங்குவதை துாரத்திலிருந்து கண்காணித்துள்ளார்.பின்னர் அவர், 'டாடா ஏஸ்' வேனை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தார். அதில், அந்த டிரைவர் போலீசாருக்கு, பணம் கொடுத்த விபரத்தைக் கூறினார்.அதனைத் தொடர்ந்து, 8ம் எண் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தை வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டு, டிரைவர் நந்தகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரையும் ஆயுத படைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.இதே போன்று, கடந்தாண்டு 8ம் நம்பர் வாகனத்தில் பணியிலிருந்து ஒரு போலீஸ்காரர் 'சம்திங்' வாங்கியதால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X