மது பாட்டில்கள் கடத்தல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மது பாட்டில்கள் கடத்தல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மது பாட்டில்கள் கடத்தல்

கடலுார்:டாடா ஏஸ் வேனில் மது பாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இரண்டரை லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள், டாடா ஏஸ் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.கடலுார் மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வனஜா தலைமையிலான போலீசார், நேற்று காலை கங்கணாங்குப்பத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டி.என்- 32- கியூ -7438 எண்ணுள்ள டாடா ஏஸ் வேனை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரியில் இருந்து 1,108 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, வேன் டிரைவர் புதுச்சேரி, பிச்சைவீரன்பேட்டை முல்லை நகரைச் சேர்ந்த வீராசாமி மகன் மணி, 35; என்பவரை கைது செய்து, இரண்டரை லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மற்றும் டாடா ஏஸ் வேனை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X