அனுமதியின்றி மணல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி மணல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்:கடலுார் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 11 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கடலுார், முதுநகர் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, தர்மலிங்கம் தலைமையிலான போலீசார், வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக எம்.புதுாரைச் சேர்ந்த பழனிவேல், செஞ்சிவேல், செல்வம், தங்க பாண்டியன், குமார், காசிநாதன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.அதே போல், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார், எம்.புதுார் பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கை செய்தபோது, அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக எம்.புதுரைச் சேர்ந்த நடேசன், மகாலிங்கம் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.நடுவீரப்பட்டுசப் இன்ஸ்பெக்டர் பக்தவச்சலு மற்றும் போலீசார் சி.என்.பாளையம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சி.என்.பாளையம் புளியந்தோப்பு வழியாக அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த மழவராயநல்லுார் சிவக்குமார், 36; முருகன், 40; ஆயிப்பேட்டை ஜான்பீட்டர், 27; ஆகிய மூன்று பேர் மீது வழக்கு 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X