விருதை நகராட்சி பகுதியில் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருதை நகராட்சி பகுதியில்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் நகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, நகராட்சி நிர்வாக ஆணையர் பார்வையிட்டார்.விருத்தாசலம் நகராட்சி பெரியவடவாடி, கண்டியங்குப்பம் பகுதிகளில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதனை, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பிரகாஷ் நேற்று மாலை பார்வையிட்டார்.பின்னர், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மணிமுக்தாற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் துவங்கிட அனுமதி கோரியுள்ள இடம், வடக்கு பெரியார் நகரில் குப்பை சேகரமாகும் பகுதியில் உள்ள உரம் தயாரிக்கும் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.தொடர்ந்து, மக்கும், மக்கா குப்பைகள் தரம் பிரித்து தருகிறீர்களா என பொது மக்களிடம் விசாரித்தார். தொடர்ந்து, டெங்கு முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்த அவர், நகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளின் விபரம் குறித்து பொறியாளர்கள், அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.ஆய்வின்போது, நகராட்சி நிர்வாக இயக்குனர் இளங்கோவன், மண்டல பொறியாளர் முருகேசன், கமிஷனர் பாலு, பொறியாளர் பாண்டு, துப்புரவு அலுவலர் குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X