தனியாக வசித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை போலீஸ்காரருக்கு தர்ம அடி; எஸ்.ஐ., சிறை பிடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியாக வசித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை போலீஸ்காரருக்கு தர்ம அடி; எஸ்.ஐ., சிறை பிடிப்பு

Added : நவ 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

வேப்பூர்:தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து, பாலியல் தொந்தரவு செய்த போலீஸ்காரருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். போலீஸ்காரர் தப்பிக்க உதவிய சப் இன்ஸ்பெக்டரை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், வேப்பூர் அடுத்த கிராமத்தில் 35 வயது பெண் தனியாக வசித்து வருகிறார். வேப்பூர் போலீஸ்காரர் ரமேஷ், கடந்த இரண்டு நாட்களாக போன் மூலம் அப்பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.நேற்று இரவு 9:00 மணியளவில் ஸ்கூட்டியில் வந்தவர், மது பாட்டில்களுடன் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சாலையில் சென்றவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.அப்போது, பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்த ரமேஷை மடக்கி பிடித்து சிறை வைத்தனர். இதனை அறித்த கிராம மக்கள் திரண்டு வந்து ரமேஷ்க்கு தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் டைமன் துரை, வீட்டின் பின் வழியாக ரமேஷை தப்பிக்க வைத்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து சப் இன்ஸ்பெக்டர் டைமன் துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தப்பியோடிய ரமேஷ் வரும் வரை அவரை உட்கார வைத்தனர். திட்டக்குடி டி.எஸ்.பி., தங்கவேல் போன் மூலம் கிராம முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டு சமரச பேச்சில் ஈடுபட்டார்.அப்போது, இன்று (11ம் தேதி) காலை, வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை அடுத்து சப் இன்ஸ்பெக்டர் டைமன் துரையை கிராம மக்கள் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-201819:29:58 IST Report Abuse
ஆப்பு டைமன் துரை - பேரே ஒரு மாதிரில்ல இருக்கு...வடிவேலு ஒரு பெண்ணை பிடிக்க போய் மாட்டிக்கிட்ட கதையால்ல இருக்கு
Rate this:
Share this comment
Cancel
11-நவ-201819:28:39 IST Report Abuse
ஆப்பு செய்தியை பழனிக்கு அனுப்பிச்சு வையுங்க...தமிழ்நாட்டு ஸ்காட்லாண்டு போலூசார் நன்நடத்தையைக் கேட்டு பூரிச்சு போயிடுவாரு. தமிழகம் அமைதிப் பூங்காவா இருக்குன்னு அறிக்கை உடுவாரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X