'தினமலர்' செய்தியால் அலுவலரை பாராட்டிய அதிகாரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தியால் அலுவலரை பாராட்டிய அதிகாரி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகாசி, பத்து ஆண்டுகளாக விடுமுறை எடுக்காது பணியாற்றும் சிவகாசி நகராட்சி அலுவலர் முத்துராஜ் தொடர்பாக,'தினமலர்' நாளிதழில் வந்த செய்தியை பார்த்து, நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.சிவகாசி ஈஞ்சார் நடுவர்பட்டி சேர்ந்தவர் முத்துராஜ், 45. பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்தார். பத்து ஆண்டுகளில் 12 ஆணையாளர்களிடம் சொத்து வரி பணி, தேர்தல் பணி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, அரசு நலத்திட்டம் வழங்கும் பணி என பல்வேறு பணிகள் புரிந்துள்ளார். அலுவலகம் வரும் மக்களிடம் முகம் சுளிக்காமல் உதவுகிறார். விேஷசங்கள் என எதற்குமே விடுமுறை எடுக்காமல் பணி புரிகிறார். சனி, ஞாயிறுகளில் சுழற்சி முறையில் பணி புரியும் நாட்களுக்கு பதிலாகவும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இதற்காகவும் விடுமுறை எடுப்பதில்லை. இது தொடர்பாக 'தினமலர்' நாளிதழில் 'பத்து ஆண்டுகளாக நோ லீவ் 'என்ற தலைப்பில் செய்தி வெளியானது. முத்துராஜ் தற்போது சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.சமீபத்தில் சிவகாசி பகுதி கட்டட ஆய்வு பணிக்காக நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் வந்திருந்தார். ஆய்வு பணி முடிந்த பின், 'தினமலர்' நாளிதழில் முத்துராஜ் பற்றி வந்த செய்தியை சுட்டிக் காட்டி , அதிகாரிகள், அலுவலர்கள் முன்னிலையில் அவரை பாராட்டினார். அவருடன் வந்த நகராட்சி மண்டல இயக்குநர் ராஜன், நகராட்சி ஆணையாளர்கள் அசோக்குமார்( சிவகாசி) அட்ஷயா (கோவில்பட்டி )பொறியாளர் சீனிவாசனும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X