திருக்கனுார் பஜார் வீதியில் அடிப்படை வசதிகள் தேவை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருக்கனுார் பஜார் வீதியில் அடிப்படை வசதிகள் தேவை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கனுார்:திருக்கனுார் பஜார் வீதியில் பஸ் நிறுத்தம், குடிநீர் வசதி, பொது கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியில் 25 கி.மீட்டர் தொலைவில் கிராமப்புறங்களில் மத்தியில் வளர்ந்து வரும் நகரமாக திருக்கனுார் திகழ்கிறது.இச்சாலையின் வழியாக விழுப்புரம், கடலுார், புதுச்சேரி, வில்லியனுார், வானுார், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் அமைந்துள்ளன.இதனால், திருக்கனுாரை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் பஜார் வீதிக்கு வந்து செல்கின்றனர்.பஜார் வீதியில் அடிப்படை வசதிகளான பஸ் நிறுத்த நிழற்குடை, குடிநீர் வசதி, பொதுகழிப்பிடம் உள்ளிட்டவை அமைக்கப் படவில்லை.இதனால், பஜார் வீதிக்கு வரும் பெண்கள், பஸ்சிற்காக காத்திருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பஜார் வீதியில் பஸ் நிறுத்தம் இல்லாததால், பஸ்கள் தனியார் பெட்ரோல் பங்க் எதிரே சாலையின் குறுக்கே நிறுத்தப்படுவதால், அடிக்கடி விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, திருக்கனுார் பஜார் வீதியில் பொதுக்கழிப்பிடம், பஸ் நிறுத்த நிழற்குடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X