உரிமம் இல்லாத வாகனங்கள் பறிமுதல் புதுச்சேரி போக்குவரத்து துறை அதிரடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உரிமம் இல்லாத வாகனங்கள் பறிமுதல் புதுச்சேரி போக்குவரத்து துறை அதிரடி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 உரிமம் இல்லாத வாகனங்கள் பறிமுதல் புதுச்சேரி போக்குவரத்து துறை அதிரடி

புதுச்சேரி:புதுச்சேரி மாநிலத்திற்குள் உரிமம் இல்லாமல் நுழைந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுச்சேரி மாநிலத்திற்குள் வரும் பிற மாநில வாகனங்கள், ஆவணங்கள் இன்றி வந்து செல்வதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரின் உழவர்கரை வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர ராவ் மேற்பார்வையில், நேற்று, முக்கிய இடங்களில் திடீர் வாகன சோதனை நடந்தது.தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, அய்யங்குட்டிப்பாளையம்பகுதிகளில், மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர், உதவி மோட்டார் ஆய்வாளர் ரவிசங்கர், முத்துராமன் ஆகியோர் வாகன தணிக்கை செய்தனர்.கோரிமேட்டில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்குள் நுழைந்த வாகனங்களின் உரிமம், லைசென்ஸ், இன்சூரன்ஸ் சரிபார்க்கப்பட்டது. உரிமம் இல்லாமல் வந்த ஆட்டோ, கழிவு நீர் வெளியேற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்களை காண்பித்து விட்டு வாகனங்களை எடுத்து செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டது.மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர் கூறும்போது, ''புதுச்சேரிக்குள் நுழையும்போது பிற மாநில வாகனங்கள், உரிமம், இன்சூரன்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். ஓவர்லோடு ஏற்றி சென்றால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அத்துடன் ஒவ்வொரு கிலோவிற்கும் 1 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஆட்டோக்களில் மீட்டர் இல்லாமல் ஓட்டினால், முதல் முறையாக சிக்கினால் 100 ரூபாய், இரண்டாவது முறையாக சிக்கினால் 200 ரூபாய் மூன்றாவது முறையாக சிக்கினால் மும்மடங்காக அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X