தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க., போட்டியிடும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க., போட்டியிடும்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

முதல்வர் நாராயணசாமி தகவல்-புதுச்சேரி:புதுச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க., போட்டியிடும் என முதல்வர் நாராயணசாமி கூறினார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம், விபத்தில் உடனடி சிகிச்சை மற்றும் மறுவாழ்வு திட்டம், ஏர் ஆம்புலன்ஸ், இதயநோய் மையம் எனஒருங்கிணைந்த ஜிப்மர் கிளைசேதராப்பட்டில் கொண்டுவர 50 ஏக்கர் நிலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ. 1,200 கோடி. இத்திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.மருத்துவ படிப்பை 10 ஆண்டுகளில் எழுதி முடிக்க வேண்டும். புதுச்சேரி பல்கலைக்கழகம் இந்த விதிமுறையை 8 ஆண்டாக குறைத்தது. 8 ஆண்டுகள் கடந்தும், புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பை முடிக்கவில்லை. இதனால், அந்த மருத்துவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பாதிக்கப்பட்டோர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். புதுச்சேரி பல்கலைக்கழகத்திடம் வலியுறுத்தப்பட்டது. பல்கலைக்கழகமும் 9 ஆண்டாக நீட்டிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 50 பேர் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது.தட்டாஞ்சாவடி தொகுதிமுன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த், புதுச்சேரி நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு, அத்தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இத்தகவல் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், அத்தொகுதியில், தி.மு.க., காங்., கூட்டணியில், தி.மு.க., போட்டியிட்டது. எனவே, அத்தொகுதியில் தற்போது போட்டியிட தி.மு.க., கோரியுள்ளது. அதற்கான உரிமையும் அக்கட்சிக்கு உள்ளது.தட்டாஞ்சாவடி தொகுதியில்தி.மு.க., வெற்றி பெற காங்., தொண்டர்களும், தலைவர்களும் நடவடிக்கை எடுப்போம். தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க காங்.,-தி.மு.க., கூட்டணி தயாராக உள்ளது.இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X