கண்டமங்கலம் அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கண்டமங்கலம் அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கண்டமங்கலம் அ.தி.மு.க., சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கண்டமங்கலம்:கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், கட்சியின் 47ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.கண்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, இணை செயலாளர் கவுரிதுரை, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் சவுரிராஜன், பேரவை செயலாளர் முருகன், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணன் வரவேற்றார். ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் குமரேசன் துவக்கவுரையாற்றினார். வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி, கள்ளக்குறிச்சி எம்.பி., டாக்டர் காமராஜ் ஆகியோர் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். தலைமைக்கழக பேச்சாளர் ஜெகநாதன் சிறப்புரையாற்றினார். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் தண்டபாணி, இணை செயலாளர் மதியழகன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், இலக்கிய அணி செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி சேகர், ஒன்றிய பொருளாளர் பாலு, ஒன்றிய மாணவர் அணி தலைவர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சம்பத், தமிழ்மணி, பாண்டியன், ஸ்ரீதர், தர்மன், முருகன், ஞானவேல், வெங்கடாஜலபதி, லட்சுமிபத்மநாபன், டி.புதுக்குப்பம் கூட்டுறவு சங்க தலைவர் துரைக்கண்ணு, நிர்வாகிகள் கலியபெருமாள், குமார், ராஜ், முருகன், தெய்வநாயகம் கலந்துகொண்டனர். கிளை செயலாளர் வேலு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X