கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நாளை முதல் பணிக்கு செல்ல முடிவு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நாளை முதல் பணிக்கு செல்ல முடிவு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள்  நாளை முதல் பணிக்கு செல்ல முடிவு

புதுச்சேரி:லிங்காரெட்டிப்பாளையம்கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, லே-ஆப் விடுமுறை இன்றுடன் முடிவடைவதால், நாளை (12ம் தேதி) முதல் பணிக்கு திரும்ப அனைத்து தொழிலாளர்களும் திட்டமிட்டுள்ளனர். புதுச்சேரியை அடுத்த லிங்காரெட்டிப்பாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 34 ஆண்டுகளாக நல்ல நிலையில் இயங்கி வந்த சர்க்கரை ஆலை, தற்போது தள்ளாட்டம் கண்டுள்ளது. கடந்தாண்டு அரவை நடக்கவில்லை. பருவ கால பணியாளர்களுக்கு கடந்த 2017 மார்ச் மாதம் லே ஆப் கொடுக்கப்பட்டது. நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி, ஒன்பது மாதங்களுக்கு லே ஆப் கொடுக்கப்பட்டது.இந்த லே ஆப் இன்று (11ம் தேதி) முடிவடைகிறது. மீண்டும் சர்க்கரை ஆலை இயங்குமா அல்லது லே ஆப் கொடுக்கப்படுமா என தெரியாமல் தொழிலாளர்கள் நிலைகுலைந்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமியை நேற்று சட்டசபையில் சந்தித்து, அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பினர் பேசினர். அப்போது மீண்டும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு செயலாளர் சிவானந்தம் கூறியதாவது:சர்க்கரை ஆலையை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். கடந்தாண்டு 2, 863 ஏக்கரில் 1.25 லட்சம் டன் கரும்பு அரவைக்கு தயாராக இருந்தது. ஆனால் 30 ஆயிரம் டன் கரும்பு மட்டுமே உள்ளதாக கணக்கு காட்டி,கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பருவம் நடக்காமல் செய்தனர். இதனால் ஆலையை மூட வேண்டியதாகி விட்டது.இந்தாண்டு 1.5 லட்சம் டன் கரும்பு மட்டுமின்றி, அரியூர் சர்க்கரை ஆலைக்கு வரவேண்டிய 50 ஆயிரம் டன் கரும்புகள் உள்ளன. எனவே ஆலையை மீண்டும் லாபத்தில் இயக்க முடியும். இன்று 11ம் தேதியுடன் லே- ஆப் முடிவடைகிறது. நாளை 12ம் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு செல்ல முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X