பட்டானுார் ஏ.எப்.டி., மில் நிலத்தை ஜப்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பட்டானுார் ஏ.எப்.டி., மில் நிலத்தை ஜப்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுச்சேரி:ஏ.எப்.டி., மில்லுக்கு சொந்தமான 56 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு ஜப்தி செய்து, ஏலம் விட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பழமை வாய்ந்த புதுச்சேரி ரோடியர் மில்லில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இங்கு இருந்து பல்வேறு நாடுகளுக்கு துணி ஏற்றுமதி செய்யப்பட்டது. தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் இருந்த ஏ.எப்.டி., ஆலையை, புதுச்சேரி அரசு எடுத்துக் கொண்டது. ஆனால், ஆலை விரிவாக்கம், நிர்வாகத்தின் தவறான செயல்பாடு காரணமாக, லாபத்தில் இயங்கி வந்த பஞ்சாலை நலிவடைந்தது. ஊழியர்களுக்கு சம்பளம் கூட போட முடியாமல், லே ஆப் விடப்பட்டது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை கூட தரவில்லை. ஏ.எப்.டி.,மில் லாபத்தில் இயங்கியபோது, கோரிமேடு அடுத்த பட்டானுாரில் 56 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. இந்த இடத்தினை விற்று தொழிலாளர்களின் சம்பளம், பணிக்கொடையை தர புதுச்சேரி அரசு சார்பில், மத்திய உள்துறைக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதற்கிடையில், ஏ.எப்.டி.,யில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பணிக்கொடை தராததால், 14 கோடியே 82 லட்சம் தொகை கேட்டு, ஏ.எப்.டி., க்கு சொந்தமான பட்டானுார் நிலத்தை தமிழக அரசின் வருவாய் துறை ஜப்தி செய்துள்ளது. அடுத்த கட்டமாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால், புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காரணம் என்னஏ.எப்.டி., தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கான பணிக்கொடை தரப்படவில்லை. பணிக்கொடை கிடைக்காத 448 ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், புதுச்சேரி தொழிலாளர் துறை கிராஜிவிட்டி அத்தாரிட்டி கமிஷனில் முறையிட்டனர். ஆலை நிர்வாகத்திடம் பேசிய கமிஷன், அனைவருக்கும் கிராஜிவிட்டி தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அப்படியும் தரவில்லை. இதனையடுத்து புதுச்சேரி மாவட்ட கலெக்டரிடம், பணிக்கொடை கிடைக்காத தொழிலாளர்கள் முறையிட்டனர். புதுச்சேரி கலெக்டர் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை. வேறு வழியின்றி புதுச்சேரி கலெக்டர், கடந்த 2014ம் ஆண்டு ஏ.எப்.டி., க்கு சொந்தமான நிலத்தை ஜப்தி செய்ய விழுப்புரம் கலெக்டருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் தான், இப்போது ஜப்தி நடவடிக்கையை விழுப்புரம் மாவட்ட வருவாய் துறையின், வானுார் தாசில்தார் அலுவலகம் துவக்கியுள்ளது. இதனை தமிழக அரசின் அரசிதழிலிலும் வெளியிட்டுள்ளது. ஏ.எப்.டி.,யில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பணிக்கொடையான 14 கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 924 ரூபாயை செட்டில் செய்ய, புதுச்சேரி அரசு முன் வந்தால் தான், ஏ.எப்.டி., நிலம், ஏலத்தில் இருந்தும், கோர்ட் நடவடிக்கையில் இருந்தும் தப்பும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X