சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னணி கவர்னர் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னணி கவர்னர் பேச்சு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை:''இந்தியாவில் சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. வெளிநாட்டிலிருந்து அதிகம் பேர் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்,'' என தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி, 'வேலம்மாள் இன்னோவேஷன் சம்மிட் அவார்ட்ஸ் 2018' துவங்கியுள்ளது. மருத்துவத்துறையில் புதுமைகள் நிகழ்த்தியவர்களுக்கு தேசிய அளவில் விருது வழங்கும் விழா நடந்தது. வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:
இந்தியாவில் சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. நோய்களை கண்டறிதல், சிகிச்சை அளிப்பதில் முன்னிலை வகிக்கிறது. குழந்தைகள், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சிறப்பாக உள்ளது. அதை நன்கு செயல்படுத்த தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும். நோய்களை பாரம்பரிய மற்றும் அலோபதி மருத்துவ முறையில் சரி செய்து, ஆரோக்கியமான சமூகம் படைக்க டாக்டர்கள் முன்வர வேண்டும் என்றார்.
மருத்துவத்துறையில் புதுமைகள் படைத்த டாக்டர்கள் மணீஷ் ஆர்.ஷா (குஜராத்), அனில்பட் (மணிப்பால்), தருண் ஜேக்கப் (வேலுார்) ஆகியோருக்கு விருது, பரிசுகளை கவர்னர் வழங்கினார்.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, கோவை ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு பங்கேற்றனர். வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி டீன் ராஜா முத்தையா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X