சிக்கல்!ஊர்க்காவல்படையினருக்கு பணி கிடைப்பதில். கிராம உதவியாளருக்கு தேர்வு நடைபெறுகிறது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிக்கல்!ஊர்க்காவல்படையினருக்கு பணி கிடைப்பதில். கிராம உதவியாளருக்கு தேர்வு நடைபெறுகிறது

Updated : நவ 11, 2018 | Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 சிக்கல்!ஊர்க்காவல்படையினருக்கு பணி கிடைப்பதில். கிராம உதவியாளருக்கு தேர்வு நடைபெறுகிறது


-நமது நிருபர்-
கிராம உதவியாளர் பணியிடங்கள், எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால்,காத்திருப்பில் உள்ள ஊர்க்காவல் படை வீரர்கள் மனம் குமுறி வருகின்றனர். புதுச்சேரி போலீஸ் துறையில், காவலர்களுக்கு இணையாக, ஊர்க்காவல் படை வீரர்கள் பணியாற்றி வந்த போதிலும், அவர்கள் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுகின்றனர். வேறு சலுகைகள் கிடையாது.அவர்களுக்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு அப்சர்ப்ஷன். இதன்படி பலஆண்டுகளாக பணிபுரியும் ஊர்க்காவல் படையினர், பிற துறைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது.பணியிடங்கள் தேர்வின்போது, காவல் துறையில் 25 சதவீதம், வருவாய் துறை கிராம உதவியாளர் பணியிடத்தில் 30 சதவீதம், தீயணைப்பு துறையில் 25 சதவீதம், சிறை துறையில் 50 சதவீதம், நிர்வாக சீர்த்திருத்த துறையில் செக்யூரிட்டி, அவுஸ் கீப்பிங் போன்ற பணியிடங்களில்6.25 சதவீதம் ஊர்க் காவல் படை வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.கடந்த 2008 ம் ஆண்டுக்கு முன்பு வரை வருவாய் துறை அப்சர்ப்ஷன்அடிப்படையில், 30 ஊர்க்காவல் படை வீரர்கள் கிராம உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்று இன்றைக்கு பணியாற்றி வருகின்றனர். பின்னர் வருவாய் துறையின் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவில்லை.தற்போது காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து, கோப்பு தயாராகி வருகிறது. வழக்கமாக ஊர்க்காவல் படை வீரர்கள் அப்சர்ப்ஷன் முறையில், கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யும்போது, அவர்களுடைய சீனியாரிட்டி மடடுமே பார்க்கப்படும். இந்த முறை எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதால், ஊர்க்காவல் படை வீரர்கள் மனம் குமுறி வருகின்றனர்.இது குறித்து ஊர்க்காவல் படை வீரர்கள் கூறும்போது, ''தற்போதுள்ள கிராம உதவியாளர் பணிக்கு காத்திருக்கும் ஊர்க்காவல் படை வீரர்கள் அனைவருமே டிகிரி முடித்துள்ளனர். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பிற துறை வாய்ப்புகளை வேண்டாம் என கூறிவிட்டு, கிராம உதவியாளர் பணிக்காக காத்திருக்கின்றனர்.தற்போது எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு என்பது, ஊர்க்காவல் படை வீரர்களின் வாய்ப்புகளை பறித்துவிடும். நியமன விதிகளின்படி, சீனியாரிட்டி அடிப்படையிலேயே கிராம உதவியாளர் பணிக்கு ஊர்க்காவல் படை வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்'' என்றனர்.பறிக்கப்படும் வாய்ப்புகடந்த காலங்களில் வருவாய் துறை கிராம உதவியாளர் பணிக்கு, 50 சதவீதம் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு வழங்கப்பட்டது. பின் இது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. எழுத்துத் தேர்வு கொண்டு வரப்பட்டதால், வருவாய் துறையில், கிராம உதவியாளர் வாய்ப்பு பறிபோய் விடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X