நடைபாதை சேதம்: ரூ.2 கோடி பாழ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நடைபாதை சேதம்: ரூ.2 கோடி பாழ்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 நடைபாதை சேதம்: ரூ.2 கோடி பாழ்

காரைக்கால்:காரைக்கால் அரசலாற்றின் கரையில் ரூ.2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டநடைபாதை, பராமரிப்பு மற்றும் பயன்பாடின்றி பாழாகி வருகிறது. தற்போது தொடர் மழையால் நடைபாதையில் பல இடங்கள் உள்வாங்கி இருப்பதுடன், புதர்மண்டி கிடக்கிறது.காரைக்காலில், கடந்த 2009ம் ஆண்டு, மதகடி பகுதியில் இருந்து விழுதியூர் சாலை ஓரமாக அரசலாற்றின் கரையில், 2 கோடி ரூபாய் செலவில் ஒரு கிலோமீட்டர் துாரத்திற்கு நடைபாதை அமைக்கப்பட்டது. பொதுப்பணி துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட இப்பணியில், ஆற்றங்கரையை பலப்படுத்தி, சிமென்ட் கட்டைகள் அமைத்து, நடைபாதையில் அழகிய கற்கள் பதிக்கப்பட்டது. ஆனால், அப்பகுதியில் மின்விளக்குகள், பொதுமக்கள் அமர ஏதுவாக இருக்கைகள் போன்றவை அமைக்கப்படவில்லை.இந்த நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் மாலை நேரத்தில் மின் விளக்கு இல்லாததால் நடைபாதையை பயன்படுத்த அச்சம் அடைகின்றனர்.நடைபாதையில் இரவு நேரதில் மது அருந்தும் குடிமகன்கள், அங்கேயே மது பாட்டில்களை உடைத்து போடுவதுடன், அலங்கோல தோற்றத்தில் படுத்து உறங்குவதால், அவ்வழியாக செல்லும் பெண்கள் முகம் சுழிக்கின்றனர். இதனால் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அழகிய நடைபாதை, பொதுமக்கள் பயன்படுத்தாமல், பாழாகி வருகிறது.பயன்பாடின்றி கிடப்பதால், நடைபாதையில் செடிகள் அதிகம் வளர்ந்து, விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. நடைபாதையில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. மேலும், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நடைபாதையின் ஒரு சில பகுதி ஆற்றில் இடிந்து விழுந்துள்ளது. எனவே, மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நடைபாதையை பொது மக்கள் பயன்படுத்தும் வகையில சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X