கடலில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: தடுக்க தேவை அதிரடி நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கடலில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: தடுக்க தேவை அதிரடி நடவடிக்கை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி, தமிழக கடற்கரைகளில் கடலில் மூழ்கி இருப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இரு மாநில போலீசாரும் இது தொடர்பாக விவாதித்து, உயிரிழப்பினை தடுக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்திற்கு வார விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை கவரும் முதல் இடம் கடற்கரை. சுற்றுலா பயணிகள் சமீப காலமாக புதுச்சேரி, மற்றும் புதுச்சேரியை ஒட்டி உள்ள தமிழக கடற்கரையில், பாதுகாப்பில்லாத ஆழம் மிகுந்த பகுதியில் குளித்து உயிரிழக்கும் சோக சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.சுனாமிக்கு பின் புதுச்சேரி, தமிழக கடற்கரை நீரோட்டத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது, கரையோரம் உள்ள மணற்பரப்பும் ஒரே மாதிரியாக இல்லை. கடலில் சில இடங்களில் பள்ளத்தாக்கினை போன்றும், சில இடங்கள் மணற்பாங்கான இடமாகவும் உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் கடலின் ஆழத்தை சரிவர கணிக்க தெரியாமல் கடலில் மூழ்கி இறக்கின்றனர்.இது ஒருபுறம் இருக்க மது போதையும் சுற்றுலா பயணிகளின் இறப்பிற்கு காரணமாக அமைந்து வரு கிறது. போதையில் கடலில் குளிப்பது ஆபத்தானது. ஆனால், சுற்றுலா பயணிகள் கடலில் குடித்து கொண்டே குளிக்கின்றனர். போதையில் ராட்சத அலையில் சிக்கி இறக்கின்றனர்.இதை தடுக்க புதுச்சேரி போலீசார் ஆழமான கடல் பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதே போல் தமிழகத்தில் ஆரோவில் போலீசாரும் கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்து வருகின்றனர். இருப்பினும் தீபாவளி பண்டிகையின்போது, புதுச்சேரி, தமிழக பகுதியில் மூன்று பேர் கடலில் மூழ்கி பலியாகி உள்ளனர்.ஆய்வு தேவைகடற்கரை பகுதிகளில் உயிரிழப்பை தடுக்க உயிரிழப்பை ஏற்படுத்தும் பகுதிகள் குறித்து , மீனவ மக்களிடம் இரு மாநில போலீசாரும் ஆலோசனை நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி, தமிழக பகுதியில் ஏதேனும் ஒரு ஆழம் இல்லாத பகுதியை கண்டறிந்து குளிக்க ஏற்பாடு செய்யலாம். அங்கு ரோந்து குழுவினர், மீட்பு குழுவினரை தயார் நிலையில் வைக்கலாம். மற்ற இடங்களில் குளிப்பதை தடை செய்யலாம்.இந்த ஆபத்தான இடங்கள் குறித்து தமிழக, புதுச்சேரி கடலோர ஓட்டல்களிலும், அவர்களுடையஇணையதளங்களிலும் கட்டாயம் விளம்பரம் செய்ய வேண்டும். இது சுற்றுலா பயணிகள் விழிப்புணர்வுடன் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X