மேரி ஹால் கட்டும் பணி 'விறுவிறு'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மேரி ஹால் கட்டும் பணி 'விறுவிறு'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மேரி ஹால் கட்டும் பணி 'விறுவிறு'

புதுச்சேரி:புதுச்சேரி கடற்கரை சாலையில், ரூ. 15.49 கோடியில் ' மேரி ஹால்' கட்டும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.புதுச்சேரி கடற்கரை சாலையில், பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 150 ஆண்டு பழமையான 'மேரி ஹால்' நகராட்சி அலுவலகமாகவும், சுப நிகழ்ச்சிகள் நடத்தும் இடமாகவும் இருந்தது. இக்கட்டணம் பழுதடைந்ததால், 2014ம் ஆண்டு உலக வங்கி நிதியுதவி மூலம் 7.50 கோடி ரூபாய் மதிப்பில், பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்தது. பணி நடந்து கொண்டிருக்கும் போது, இடிந்து விழுந்தது.அதையடுத்து, அதே இடத்தில் பழமை மாறாமல் புதிய கட்டடம் கட்ட, உலக வங்கி உதவியுடன், ரூ. 15.49 கோடியில் மேரி கட்டடம் கட்டும் பணி, கடந்த ஆண்டு நவ., 7ம் தேதி துவங்கியது. முதல்வர் நாராயணசாமி பணியை துவக்கி வைத்தார்.பணி துவங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில், கட்டுமான பணி, தொய்வின்றி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இப்பணியை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனம், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணிகளை வேகமாக செய்து வருகிறது. தற்போதைய நிலையில், பைல் பவுண்டேஷன் முறையில் பில்லர்கள் அமைக்கப்பட்டு, கட்டுமான பணியும் 50 சதவீதம் அளவிற்கு முடிக்கப்பட் டுள்ளது. பணி நடக்கும் தீவிரத்தை பார்த்தால், ஓராண்டில் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு வந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X