பண்டசோழநல்லூரில் விவசாயிகள் அவதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பண்டசோழநல்லூரில் விவசாயிகள் அவதி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பண்டசோழநல்லூரில் விவசாயிகள் அவதி

நெட்டப்பாக்கம்:பண்டசோழநல்லுார் கிராமத்தில் விவசாயிகள் நலன் கருதி அமைக்கப்பட்ட சிமென்ட் களத்தில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் கால்நடைகள் கட்டி ஆக்கிரமித்துள்ளதால், விவசாயிகள் அவதி அடைகின்றனர்.நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில், நெல், காராமணி, மணிலா, உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இவற்றை பஸ் செல்லும் சாலையில் போட்டு, விவசாயிகள் பிரித்தெடுத்தனர்.விவசாயிகள் நலன் கருதி நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், பண்டசோழநல்லுார் குளக்கரை அருகில் சிமென்ட் களம் அமைக்கப்பட்டது. இதன் மூலம், விளை பொருட்களை உலர வைத்து பிரித்தெடுத்தனர். தற்போது இந்த சிமென்ட் களத்தில், அப்பகுதிகளை சேர்ந்தவர்கள் கால்நடைகளை கட்டியும், வைக்கோல் போர் அமைத்தும் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால், விவசாயிகள், சாலையிலேயே, விளை பொருட்களை பிரித்தெடுக்க பயன்படுத்துகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.எனவே, பண்டசோழ நல்லுாரில் உள்ள களத்தினை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X