கிராம புற பள்ளிகளில் நீட் தேர்வு பதிவு மையம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கிராம புற பள்ளிகளில் நீட் தேர்வு பதிவு மையம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா

புதுச்சேரி:கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில், அரசு பள்ளிகளில் நீட் பதிவினை, பள்ளி கல்வித் துறை ஆரம்பிக்க வேண்டும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ சேர்க்கை நுழைவுத் தேர்வான நீட்டை, சி.பி.எஸ்.இ., நடத்தி வந்த நிலையில், இனிவரும் காலங்களில் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தவுள்ளது. அடுத்த ஆண்டில் மே 5ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரைநீட் தேர்வு நடைபெறவுள்ளது.பிளஸ் 2 படிக்கும் அல்லது படித்து முடித்த மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் நவம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. புதுச்சேரியில் நீட் தேர்வினை எழுத ஏராளமாகனோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதன் காரணமாக பொது சேவை மையங்கள், இன்டர்நெட் சென்டர்கள் நிரம்பி வருகின்றன. ஆனால் கிராம புறங்களில் நீட் பதிவு மந்த கதியில் நடந்து வருகிறது. நீட் தேர்வுவினை எழுத முடியுமா என தயக்கமும், போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் நீட் பதிவு குறித்துவிழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும். பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி, பிளஸ் 1 மாணவர்களுக்கு நீட் பதிவு குறித்து பள்ளி கல்வித் துறை பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X