இந்த வாரத்தில் ஏனாம்...| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்த வாரத்தில் ஏனாம்...

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

-நமது நிருபர்-ஏனாம் பகுதியில் தீபாவளி பண்டிகையை பெரியளவில் கொண்டாடுவதில்லை. தீபாவளிக்கு மறுநாள், ஒவ்வொரு வீட்டிலும் லட்சுமி பூஜையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம், லட்சுமி பூஜை முடிந்தவுடன், தீபாவளியைபோல பட்டாசுக்களை வெடித்து மகிழ்கின்றனர். இந்தாண்டும் வழக்கமான உற்சாகத்துடன் ஏனாமில் லட்சுமி பூஜை கொண்டாடப்பட்டது.தமிழகம், புதுச்சேரியில் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், பெருமாளுக்காக விரதம் இருப்பது வழக்கம். ஏனாமில், கார்த்திகை மாதம், கடந்த 8ம் தேதியன்று துவங்கியது. ஏனாம் மக்கள் இந்த மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் சிவனுக்கு விரதம் இருக்கின்றனர்.மேலும், தினசரி ஆற்றில் காலை நேரத்தில் நீராடி, சிவன் கோவிலில் பூஜை செய்வதையும் பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். ஆறு இல்லாத இடங்களில், குளத்தில் நீராடுகின்றனர். இதை முன்னிட்டு, ஏனாமில் கோதாவரி ஆற்றங்கரையில் குளியல் அறைகள், ஆடை மாற்றும் அறைகள், கழிப்பிட வசதிகளை, ஏனாம் நிர்வாகம் செய்து தந்துள்ளது.கவர்னரின் உத்தரவுப்படி, ஏனாமிலும், வார இறுதி நாளான சனிக்கிழமைதோறும் 'மக்கள் இணைப்பு' என்ற பெயரில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இதன்படி, ஏனாம் மண்டல நிர்வாகி சுப்ரமணியேஸ்வர ராவ் தலைமையில் அதிகாரிகள் மெட்டக்கூர் கிராமத்துக்கு நேற்று காலை சென்று பார்வையிட்டனர். அங்கு துாய்மை பணிகளை வேகப்படுத்துமாறு உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X