குடிபோதையில் தவறி விழுந்த ஏட்டு இறப்பு | Dinamalar

குடிபோதையில் தவறி விழுந்த ஏட்டு இறப்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:குடிபோதையில் தவறி விழுந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு, தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.உப்பளம் நேதாஜி நகர் அசோகன் தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 62, இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.புதுச்சேரியில் போலீஸ் துறையில் ஏட்டாக பணிபுரிந்து வந்த தட்சணாமூர்த்தி பின்னர் பிரெஞ்ச் குடியுரிமை கிடைத்ததால் போலீஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிரான்சில் வசித்து வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தட்சணாமூர்த்தி மட்டும் புதுச்சேரி வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தட்சணாமூர்த்தி இறந்தார்.ஒதியஞ் சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, ஏட்டு ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X