அதிக ஆட்கள் இருந்ததே அரசு சார்பு நிறுவன நஷ்டத்திற்கு காரணம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அதிக ஆட்கள் இருந்ததே அரசு சார்பு நிறுவன நஷ்டத்திற்கு காரணம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி:அரசு சார்பு நிறுவனங்களின் நஷ்டத்திற்கு, முன்னாள் முதல்வர் ரங்கசாமி தேவைக்கு அதிகமாக ஆட்களை வைத்ததே காரணம் என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். சட்டசபையில் அவர்,நிருபர்களிடம் கூறியதாவது; புதுச்சேரியில் உள்ள அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களை நடத்த ரூ.786 கோடி ஒதுக்கப்பட்டது. 2 ஆண்டுகள் சம்பளத்திற்காக ரூ.326 கோடி கொடுக்கப்பட்டது. அந்நிறுவனங்களின் நஷ்டத்திற்கு, முன்னாள் முதல்வர் ரங்கசாமி தேவைக்கு அதிகமாக ஆட்களை வைத்ததே காரணம். பொது துறை நிறுவனங்கள் சீர்த்திருத்தம் தொடர்பாக, விஜயன் கமிட்டி கூறிய ஆட்குறைப்பு, நிர்வாக சீர்த்திருத்தம் படிப்படியாக மேற்கொள்ளப்படும். மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னருக்கான நிதி அதிகாரத்தை, முதல்வர், அமைச்சர்கள், செயலர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற உத்தரவை, கவர்னர் மதிக்காமல் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் கோப்பை, பல கேள்வி கேட்டு திருப்பி அனுப்புகிறார். காதி போர்டு, பி.ஆர்.டி.சி., உள்ளிட்டவை மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள். கவர்னர் லாபம் ஈட்ட வேண்டும், இல்லையென்றால், தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கூறுகிறார். ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க, பட்டானுார் நிலத்தை விற்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதற்கும் முட்டுக்கட்டை போடப்படுகிறது. தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற விஜயன் கூற்றை ஏற்கும் கவர்னரின் எண்ணத்தை ஏற்க முடியாது. அதை முடிவு செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை. கவர்னர் இன்று இருப்பார், நாளை டில்லி சென்று விடுவார். அதிகாரத்தை மீறி செயல்படும் கவர்னர் குறித்து லட்சுமி நாராயணன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. அதிகார மீறலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X