முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 முன்னாள் அமைச்சர்  ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி:வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து, முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் ஆதரவாளர்கள் கருவடிக்குப்பம் சிவாஜி சிலை எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமியை மிரட்டியதாக, முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்யாணசுந்தரம் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், மக்கள் பிரச்னைக்காக சென்றவர்களை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், கல்யாணசுந்தரத்தின் ஆதரவாளர்கள், கருவடிக்குப்பம் சிவாஜி சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில், நேற்று ஈடுபட்டனர்.அப்போது உழவர்கரை நகராட்சி ஆணையரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். எஸ்.பி., ரட்சனா சிங், இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X