தேர்தலை மனதில் வைத்து திட்டங்களை நிறைவேற்றுவதில்லை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேர்தலை மனதில் வைத்து திட்டங்களை நிறைவேற்றுவதில்லை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தேர்தலை மனதில் வைத்து திட்டங்களை நிறைவேற்றுவதில்லை

மத்திய பா.ஜ., ஆட்சி குறித்து இல கணேசன் பெருமிதம்

புதுச்சேரி:பா.ஜ., ஆட்சியில் தேர்தலை மனதில் வைத்து திட்டங்களை நிறைவேற்றவில்லை. அடுத்த தலைமுறையை நினைத்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என இல கணேசன் கூறினார்.முதலியார்பேட்டை தொகுதி பா.ஜ., சார்பில், மத்திய அரசின் நான்கரையாண்டு சாதனைகள் மற்றும் புதுச்சேரியில் இரண்டரை ஆண்டு காங்., ஆட்சியின் வேதனை குறித்த பொதுக்கூட்டம் வானொலி திடலில் நடந்தது. தொகுதி தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நகர மாவட்ட தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர்கள் ரவி அண்ணாமலை, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி வரவேற்றார். முன்னாள் எம்.பி., இல கணேசன் பேசியதாவது:காங்., தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ள மக்களும் தயாராக இல்லை, எதிர்க்கட்சிகளும் தயாராக இல்லை. கர்நாடகாவில் காங்., வலிய சென்று குமாரசாமிக்கு ஆதரவு தெரிவித்ததுள்ளது. அங்கு சிறிது முயற்சி செய்திருந்தால் பா.ஜ., ஆட்சிக்கு வந்திருக்கும். அதனால் தான் புதுச்சேரி வந்த பிரதமர் மோடி. காங்., கட்சியில் நாராயணசாமி மட்டுமே கடைசி முதல்வராக நாட்டில் இருப்பார் என்று கூறிவிட்டு சென்றார். பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் ஒரு திட்டத்தை அறிவித்து வருகிறார். இதனால் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். வாஜ்பாய் மற்றும் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி, தேர்தலை மனதில் வைத்து திட்டங்களை நிறைவேற்றவில்லை. அடுத்த தலைமுறையை நினைத்து திட்டங்களை நிறைவேற்றி வருகி்றது.தங்க நாற்கர சாலை முதல், இலவச காஸ் இணைப்பு என பல்வேறு பா.ஜ., செய்த சாதனைகளை மக்களிடம் கூறி ஓட்டு கேட்கபோகிறோம். 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வீடு இல்லாதவர்களே இருக்க கூடாது என்ற திட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கப்படுகிறது. பக்கத்து நாட்டிலும் ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் வழங்கியது பா.ஜ., ஆட்சியில் தான்.அரசு மானியங்கள், மக்கள் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்துவதால் கோடிக்கணக்கில் அரசுக்கு லாபம். ஐந்து பேர்கள் உள்ள குடும்பத்தில் ஆளுக்கு ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை மக்கள் பயனடைவவர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சங்கர், செல்வகணபதி, செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், கணேசன், விஜயரங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வினோத் ஜான்சன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X