எந்த பழியையும் சுமக்க தயார் முன்னாள் அமைச்சர் அறிவிப்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

எந்த பழியையும் சுமக்க தயார் முன்னாள் அமைச்சர் அறிவிப்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:தொகுதி மக்களுக்காக எந்த பழியையும் சுமக்க தயார் என, முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;நான் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது காலாப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கென சொந்த செலவில், 5 சுத்தகரிக்கப்ட்ட குடிநீர் நிலையம் அமைத்து, இலவசமாக குடிநீர் வழங்கி வந்தேன். இதனை அரசே நடத்த அனுமதி கேட்டு நெருக்கடி கொடுத்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். எனக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த தீர்ப்பின் நகலை கடந்த 7 ம் தேதி உழவர்கரை நகராட்சி அலுவலகம் சென்று ஆணையர் கந்தசாமியிடம் கொடுத்தேன். அதனை படிக்காமல் கசக்கி துாக்கி எறிந்தார். உடனே அங்கிருந்து வெளியேறினேன். சிறிது நேரத்தில் வெளியே வந்த அவர், சாதியை குறிப்பிட்டு அவதுாறாக பேசியதாக தெரிவித்தார். பின்னர், ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில், என் மீது பழி சுமத்தி நகராட்சி ஆணையர் புகார் கொடுத்துள்ளார். என் மீதும், என்னோடு வந்த அப்பாவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. தொகுதி மக்களின் நல்வாழ்விற்காக எத்தகைய பழியையும் சுமக்க தயார். என் மீது சுமத்தப்பட்ட புகார் பொய் என்பதை நிரூபிப்பேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X