டானிக் என நினைத்து பினாயில் குடித்தவர் பலி| Dinamalar

டானிக் என நினைத்து பினாயில் குடித்தவர் பலி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:காலாப்பட்டு அருகே டானிக் என நினைத்து பினாயிலை குடித்த முதியவர் இறந்தார்.காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான மாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 70; கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக மருந்து சாப்பிட்டு வந்தார். சம்பவத்தன்று சுப்பிரமணியன் வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து டானிக் என குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அவரது குடும்பத்தினர் கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுப்பிரமணியன், நேற்று முன்தினம், இறந்தார். இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X