நல்ல 'ஐடியா' இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம்! ஏற்றுமதி டாக்குமென்டேஷன் சந்தேகங்களா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நல்ல 'ஐடியா' இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம்! ஏற்றுமதி டாக்குமென்டேஷன் சந்தேகங்களா?

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஒன்று என்பது, எப்போதும் கூட்டம் ஆகாது. ஆனால், 'ஒன் கிரவுடு' என்று பெயர் வைத்து, ஒரு 'கிரவுடு' பண்டிங் தளத்தை, தொழிலில் உள்ள பிரபலங்கள் சிலர் உருவாக்கியுள்ளனர்.
பலரிடம் நல்ல ஐடியா இருக்கலாம்; பண வசதி இல்லாமல் இருக்கும். அந்த ஐடியாவை தொழிலாக மாற்ற உதவும் இடம் தான், 'ஒன் கிரவுடு' (1 crowd). பணவசதி உள்ளவர்கள், தங்களை இன்வெஸ்டராக (Investors) பதிவு செய்து கொள்ளலாம். 'ஐடியா' உள்ளவர்கள், தங்களை தொழில்
செய்பவர்களாக (Entrepreneurs) பதிவு செய்து கொள்ளலாம்.
இவர்களிடமிருந்து, என்ன கிடைக்கும்? உங்களிடம் வித்தியாசமான ஐடியா இருந்தால், இவர்கள் 'கிரவுடு பண்டிங்' மூலமாக மட்டும் இல்லாமல், தங்கள் கம்பெனி மூலமாக, உங்கள் கம்பெனியில் முதலீடு செய்வர். ஐடியாக்கள் மிகவும் நன்றாக இருந்தால், 'பிசினஸ் பிளான்' தயார் செய்வது, உங்கள் நிறுவனத்தை எடுத்து செல்வது, 'பிசினஸ் மாடல்' தயார் செய்வது, முதலீட்டாளர்களிடம் எவ்வாறு அதை முன்மொழிவது, பணம் திரட்டுவது, எப்படிப்பட்ட வழிகாட்டி வேண்டும் என்பன உட்பட எல்லா வேலைகளையும் செய்து விடுவர்.
'ஸ்டார்ட் அப்' புதிதாக இருந்தாலும் சரி, ஒரு வேளை முன்னதாக துவக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் ஆனாலும் சரி, இந்த 'ஒன் கிரவுடு' மூலம் பணத்தை திரட்ட முயற்சிக்கலாம். இணையதளம்: www.1crowd.coசந்தேகங்களுக்கு: Sethuraman.sathappan@gmail.com அலைபேசி எண்: 098204-51259
எல்.சி. டிஸ்கவுவ்டிங் என்றால் என்ன?

- ராமசுதன், திருப்பூர்.
உங்களது எல்.சி., 'யூ சான்ஸ் எல்.சி.,' என்றால், அதாவது 30, 60 அல்லது, 180 நாட்கள் கழித்து பணம் கிடைக்குமாறு இருக்கும் எல்.சி., என்றால், பணம் உடனடியாக தேவையாக இருக்கும் பட்சத்தில் அதை 'டிஸ்கவுன்ட்' செய்து வட்டி கழித்து கொண்டு பணம் பெறும் முறை இது.
உங்கள் நிறுவனத்துக்கு வங்கியில், லிமிட் இருந்தால், அதற்குள், டிஸ்கவுன்டிங் செய்வர். இல்லாவிடில் எந்த வங்கியில் இருந்து, எல்.சி., வந்திருக்கிறதோ? அந்த வங்கியின், 'லிமிட்'டின் கீழ் செய்வர். இது பெரும்பாலும், எந்த வங்கி எல்.சி.,யை அனுப்புகிறதோ? அந்த வங்கி 'டாக்குமென்ட்'களை 'அக்சப்ட்' செய்தவுடன், அதை வைத்துத்தான் 'டிஸ்கவுன்டிங்' செய்யப்படும்.
நாங்கள் வங்கியில் கொடுத்த எல்.சி., டாக்குமென்டில், தவறுகள் இருந்தன. வங்கி அதிகாரி அதை, யூ.சி.பி.600ன் கீழ் அனுப்ப இயலாது என்றும், அந்த டாக்குமென்டை யூ.ஆர்.சி. 522 (கலெக்ஷன் ரூல்ஸ்) கீழ் தான் அனுப்ப இயலும் என்றும் கூறுகிறார்?
அவர் கூறுவது சரியா?
-கண்ணன், கோவை.
மிகவும் தவறு. டாக்குமென்ட்களை யூ.ஆர்.சி. (கலெக்ஷன்) கீழ் அனுப்ப கூடாது. எல்.சி., யின் கீழ் ஒரு 'யூசான்ஸ் டாக்குமென்ட்' அனுப்பினால், இறக்குமதியாளரின் வங்கிக்கு சென்று அவர்களுக்கு கிடைத்த நாளுக்கு, மறுநாளில் இருந்து, 5 வேலை நாட்களுக்குள், உங்கள் வங்கிக்கு, அதில் தவறுகள் ஏதும் இருக்கிறதா? என்று அந்த வங்கி தெரிவிக்க வேண்டும்.
அதாவது, அந்த டாக்குமென்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்று. இந்த விதி கலெக்ஷன் அனுப்பும் போது இல்லை. மேலும், 'டாக்குமென்ட்' கலெக்ஷனில் அனுப்பும் போது இறக்குமதியாளரின் வங்கி 'அக்சப்டன்ஸ்' பெற்று கொண்டு, இறக்குமதியாளரிடம் கொடுத்து விடலாம். அவர் முடிவு தேதியில் பணம் கட்டவில்லையென்றாலும், அவரை கேட்க முடியாது. அவர் மீது வழக்கு வேண்டுமானால் தொடுக்கலாம்.
எல்.சி., டாக்குமென்டில், தவறு இருந்தால், தவறுகளை குறிப்பிடாமல் 'யூ.சி.பி.600'ன் கீழ், டாக்கு
மென்ட் அனுப்பப்படுகிறது என்று, அனுப்புவது சிறந்தது. அதே நேரம், 'டாக்குமென்ட்' வங்கி, உங்கள் லிமிட்டில் 'டிஸ்கவுன்ட்' செய்து தருகிறது என்றால், உங்களிடம் ஒரு கடிதம் வாங்கி கொள்வர். 'டாக்குமெட்டுக்கு' பணம் வரவில்லை என்றால், உங்கள் கணக்கில் பற்று வைக்கப்படும்.

- சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X