வேளாண் துறையில் மானியத்தில் விதை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் துறையில் மானியத்தில் விதை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 வேளாண் துறையில் மானியத்தில் விதை

மரக்காணம்:மரக்காணம் அருகே வேளாண் துறை சார்பில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் விதை வழங்கப்பட்டது.மரக்காணம் ஒன்றியம், மானுாரில் உள்ள வேளாண் துறை விதை விற்பனை நிலையத்தில், மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் உளுந்து விதை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை வேளாண் உதவி இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு விதைகளை வழங்கினார். வேளாண்மை அலுவலர் ரவிசந்திரன், உதவி விதை அலுவலர் மோகன் முன்னிலை வகித்தனர். விதை கிடங்கு மேளாலர் பவாணி வரவேற்றார். உதவி தொழில்நுட்ப அலுவலர் வீராசாமி, உதவி வேளாண் அலுவலர் சுரேஷ், விஜயலட்சுமி, பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் மானியத்தில், விதையை வாங்கி பயனடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X