கொஞ்சம் கவனிங்க சார்  தண்ணீர் தொட்டிகளில் நோய் கிருமிகள்  கட்டுப்படுத்துமா உள்ளாட்சி நிர்வாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொஞ்சம் கவனிங்க சார்  தண்ணீர் தொட்டிகளில் நோய் கிருமிகள்  கட்டுப்படுத்துமா உள்ளாட்சி நிர்வாகம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள் சரிவர சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் நோய்கிருமிகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொது இடங்கள், அலுவலகங்கள், வீடுகளில் நடத்தும் ஆய்வை தண்ணீர் தொட்டிகளையும் செய்து துாய்மைப்படுத்த வேண்டும்.மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் மக்களுக்கு சளி, இருமல், தொடர்காய்ச்சல் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு நாளும் காய்ச்சலால் பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் பலமணிநேரம் காத்திருந்து மருத்துவம் பார்க்கின்றனர். மாவட்டத்தில் பரவலாக பன்றி காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அரசு நிர்வாகமும், சுகாதாரத்துறையினரும் தீவிர நோய்தடுப்பு பணிகளை செய்து வருகின்றனர். வீடு,வீடாக தண்ணீர் தொட்டிகளையும், பிளாஸ்டிக் டிரம்களையும் ஆய்வு செய்து மருந்துகளை ஊற்றி செல்கின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரவகிருமி நாசினிகளை பயன்படுத்தி சுத்தம் செய்து வருகின்றனர். பஸ்களில் கூட துாய்மைப்பணி நடக்கிறது. இவ்வாறு துாய்மைபணிகள் ஒருபுறம் நடந்தாலும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகள், உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் டிரம்களும் சுத்தப்படுத்தாமல் உள்ளது. இதிலிருந்து தண்ணீர் குடிப்பவர்கள் நோய்களால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X