குதூகலமான குழந்தைகள் மனம் குளிர்ந்த ஆசிரியர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குதூகலமான குழந்தைகள் மனம் குளிர்ந்த ஆசிரியர்கள்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகாசிகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று... ஒவ்வொரு மனிதனும் ஏங்குவது மீண்டும் குழந்தைப் பருவத்திற்காக மட்டுமே. விளையாட்டாக இருந்தாலும், பல்வேறு போட்டிகளாக இருந்தாலும் குழந்தைகளுக்கு வெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை. அவர்கள் பங்கேற்பதையே மிகவும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். எதைக்கற்றுக் கொடுத்தாலும் உடனடியாக அதை கற்றுக்கொள்வார்கள். எவ்வளவு கவலைகள் இருந்தாலும் சிறிது நேரம் குழந்தைகளோடு நேரம் செலவழித்தால் மொத்தக் கவலையும் பறந்து விடும். குழந்தை என்றாலே குதுாகலம்தான். பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்வியை மட்டுமே தொடர்ந்து கற்றுக் கொடுத்தால் , அவர்கள் விரக்தியடைந்து விடுவார்கள். அவர்களின் மனநிலைக்கு ஏற்ப பாடங்களைக் கற்றுத் தர வேண்டும். இதனால்தான் பெரும்பான்மையான பள்ளிகளில் குழந்தைகளுக்கு விளையாட்டோடு சேர்த்து பாடங்களை நடத்துகிறார்கள். குழந்தைகளுக்காக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவ. 5 ஐ குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் பள்ளிகளில் விளையாட்டு , நடனம், பாடல் , மாறுவேடப் போட்டிகள் என பல்வேறு வகை போட்டிகள் நடத்தப்படுகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளால் குழந்தைகளும் உற்சாகமடைகின்றனர். இதன் வாயிலாக குழந்தைகளிடம் 'கிரியேட்டிவிட்டி' வளர்கிறது. அவர்களின் தனித் திறமைகளும் கண்டறியப்படுகிறது.இதற்காகவே சிவகாசி அனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. குழந்தைகளும் உற்சாகமாக கலந்து கொண்டனர். மாறுவேடப் போட்டியில் காந்தி, நேரு, பாரதியார் , வேலுநாச்சியார் என பல்வேறு தேச தலைவர்களின் வேடங்களை ஏற்று அசத்தினர். குழு நடனம், தனி நடனம் நடத்தப்பட ஒவ்வொரு குழந்தைகளும் அவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெளியான தனித்திறமைகள்குழந்தைகளை கொண்டாடுவதற்காக குழந்தைகள் தினம் நடத்தப்பட்டது. இதன் மூலம் குழந்தைகளின் தனித் திறமைகள் கண்டறியப்பட்டது. அவர்களின் 'கிரியேட்டிவிட்டி' வளர்ந்தது. சில குழந்தைகள் தாங்களாகவே நடன அசைவுகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் உற்சாகமாக கலந்து கொண்டனர். பெற்றோருக்கே அவர்களது குழந்தைகளின் திறமைகள் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் பள்ளியில் நடந்த போட்டிகளில் பங்கேற்றதின் மூலம் பெற்றோரும் குழந்தைகளைப் பற்றி அறிந்து கொண்டனர்.மேபல் தேவி , பள்ளி முதல்வர்



மீண்டும் குழந்தையாக...குழந்தைகளோடு பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் குழந்தைப் பருவத்திற்கே சென்று வந்த மனநிலை ஏற்பட்டது. அவர்களின் தேடுதல் அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வியை மட்டுமே கற்றுக் கொடுத்தால் ஆசிரியர்களைப் பிடிக்காமல் போய்விடும்.. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி குழந்தைகளோடு நாமும் பங்கேற்றதால் மகிழ்ச்சியடைந்தனர்.கவிதா , ஆசிரியை


போச்சு கூச்ச சுபாவம்பொதுவாக குழந்தைகளுக்கு கூச்ச சுபாவம் இருக்கும். தங்களது வீடு தவிர மற்ற இடங்களில் சகஜமாக இருக்க மாட்டார்கள். குழந்தைகள் நடனம், பாடல் மற்றும் மாறுவேடப் போட்டிகளுக்காக மேடை ஏறினர். இதனால் அவர்களுக்கு சிறு வயதிலேயே மேடை பயம் அகன்று விடுகிறது. கூச்ச சுபாவம் இருக்காது.தெரசா ஞானசவுந்தரி, ஆசிரியை.



போனது பயம் வந்தது நட்புகுழந்தைகள் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் போட்டிகளில் கலந்து கொண்டனர். பெற்றோரும் தங்களது குழந்தைகளை இப்படி பார்க்கையில் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். தேச தலைவர்களின் வேடம் ஏற்று வந்ததால், அவர்களைப் பற்றியும் சிறு வயதிலேயே அறிந்து கொண்டனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளால் ஆசிரியர்களோடு பயமின்றி நட்போடு பழகினர்.ராஜி பிரபா, ஆசிரியை.



தேவை உடனடி நடவடிக்கைமாவட்டத்தில் ஊராட்சி முதல் நகராட்சி வரை ஒவ்வொரு வார்டிலும் பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை கிருமி நாசினிகள் பயன்படுத்தி குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை கூட சுத்தம் செய்வது கிடையாது. இதில் தேங்கி உள்ள தண்ணீரில் நோய்கிருமிகள், புழுக்கள் உற்பத்தியாகிறது. வீடுதோறும் ஆய்வு செய்யும் அதிகாரிகள் இந்த தண்ணீர் தொட்டிகளை கண்டுகொள்வதில்லை. இதனால் மக்கள் நோய்களுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.- வேதநாயகம், சமூக ஆர்வலர், ஸ்ரீவில்லிபுத்துார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X