கஞ்சனுாரில் காந்தி பிறந்த நாள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கஞ்சனுாரில் காந்தி பிறந்த நாள் விழா

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கஞ்சனுாரில் காந்தி பிறந்த நாள் விழா

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனுாரில் காந்தியின் 150 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.கஞ்சனுார் மகாத்மா காந்தி மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில் காந்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடல், காந்தியின் அரிய புகைப்பட கண்காட்சி, பசுமை சேனா துவக்க விழா ஆகிய முப்பெரும் விழாவிற்கு புது டில்லி தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குனர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் தண்டபாணி, அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ஜெகத்குரு, புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சந்தியா வரவேற்றார். பொருளாளர் அனுசுயா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சி.இ.ஓ., முனுசாமி, காந்தியின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தும், காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்தை வெளிட்டும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார்.காந்தியின் வாழ்க்கை நடைமுறை, சிந்தனைகள் குறித்து சென்னையை சேர்ந்த விப்ர நாராயணன், பிரேமா, சிவலிங்கம், டாக்டர் வெற்றிச்செல்வம், நித்யானந்தம், ஜெயராஜ், ராஜாராம், மோகன் ஆகியோர் மாணவர்களிடையே பேசினர். டி.இ.ஓ., ஆனந்தன், ஆசிரியர் மோகன் குமார், வினாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பள்ளி செயலர் ஞானசம்பந்தன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X