டெங்கு தடுப்பு நடவடிக்கைஒருங்கிணைப்புக்குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு தடுப்பு நடவடிக்கைஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 டெங்கு தடுப்பு நடவடிக்கைஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சுகாதாரப்பணிகள் கூடுதல் இயக்குனர் மாதவி, மாவட்ட இணை இயக்குனர் பாலுசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை இயக்குனர் ஜெமினி வரவேற்றார்.கள்ளக்குறிச்சி, சின்னசேலம் வட்டத்துக்குட்பட்ட பி.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வி.ஏ.ஓ.,க்கள், பஞ்., செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் முறை குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.மேலும் மாவட்டந்தோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதாரப்பணியாளர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் தங்களின் பங்களிப்பை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ரத்தினமாலா, டி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X