பேரணி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேரணி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பேரணி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த பேரணியில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த பேரணி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை மற்றும் படூர் சுப்ரீம் மருத்துவமனை மற்றும் அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமிற்கு கல்விக்குழு தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார். மாஜி பஞ்., தலைவர் சுப்ரமணியன்,மாஜி துணை தலைவர் சேகர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிர்வாகி சரவணன் வரவேற்றார். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆர்.எம்.ஓ., கதிர் முகாமை துவக்கி வைத்தார். இருவேல் பட்டு வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி ரத்ததான முகாமினை துவக்கி வைத்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி தலைவர் ரவிசங்கர் தலைமையில் மருத்துவ குழுவினர் அரசு அதிகாரிகள் மற்றும் இளைஞர்களிடம் ரத்ததானம் பெற்றனர். சுப்ரீம் மருத்துவமனை டாக்டர் ராஜேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர் . மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியர் அம்பேத்கார், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், இளைஞர் மன்ற நிறுவனர் பாக்கியராஜ், ஸ்ரீதரன், சீனிவாசன், தண்டபாணி, லட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிர்வாகி ராமு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X