செஞ்சி பகுதியில் காய்ச்சல் அதிகரிப்புகொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சி பகுதியில் காய்ச்சல் அதிகரிப்புகொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

செஞ்சி:செஞ்சி பகுதியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொசுக்களை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழை துவங்கும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் காய்ச்சல் பரவுகிறது. சாதாரண காய்ச்சலுடன், டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா, பன்றி காய்ச்சல் ஆகியவையும் இந்த மாதங்களில் பரவுகின்றன. இது குறித்த விழிப்புணர்வினால், காய்ச்சல் வந்ததும் பொதுமக்கள் உடனே மருத்துவமனைக்கு வருகின்றனர். காடும், மலையும் நிறைந்த செஞ்சி பகுதியில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இதுவரை சரியாக பொழிய வில்லை. இதுவரை பொழிந்த குறைவான மழையினால் பாறைகளில் உள்ள பள்ளங்களில் சுத்தமான தண்ணீர் தேங்கி உள்ளன. தொடர் மழை பொழிந்திருந்தால் இந்த மழை நீர் அடித்து செல்லப்பட்டு கொசு முட்டைகள் அழிக்கப்பட்டிருக்கும். மழை இல்லை என்பதால் பாறைகளில் உள்ள தண்ணீரிலும், ஓடைகள், சிறிய நீர் நிலைகளில் உள்ள நல்ல தண்ணீரிலும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. செஞ்சி நகர பகுதியில் மட்டுமின்றி, கிராமங்களிலும் கொசுக்கள் அதிகரித்து விட்டன. இவைகளை அழிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த காலங்களில் இந்த மாதத்தில் நகர பகுதியிலும், கிராம அளவிலும் கொசுப்புகை அடிப்பதும், கழிவு நீர் கால்வாயில் கொசு மருந்து அடிப்பதும் வழக்கம். உள்ளாட்சி பதவிகள் காலியாக இருப்பதால் இந்த பணிகள் முடங்கி கிடக்கின்றன. இதனால் கொசுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் காயச்சலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை முன்பை விட பெருமளவு அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளிலும் காயச்சலுக்கு வருபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காய்ச்சல் குணமாகாதவர்கள் முண்டியம்பாக்கம், புதுச்சேரி, சென்னைக்கு சிகிச்சைக்கு செல்கின்றனர். எனவே செஞ்சி பகுதியில் கொசுக்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X