குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால்போக்சோ சட்டத்தை பயன்படுத்த தயங்கக் கூடாது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால்போக்சோ சட்டத்தை பயன்படுத்த தயங்கக் கூடாது

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால்போக்சோ சட்டத்தை பயன்படுத்த தயங்கக் கூடாது

அரசு சிறப்பு வழக்கறிஞர் பேச்சு

விழுப்புரம்:குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்போர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யுமாறு, அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில் வலியுறுத்தினார்.விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், குற்றத்தடுப்பு மற்றும் கோர்ட்டில் வழக்கு விசாரணையை கையாள்வது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.,பிக்கள் முகிலன், புகழேந்தி, டி.எஸ்.பி.,க்கள் முத்துமாணிக்கம், நீதிராஜ், சங்கர், ராமநாதன் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட அரசு குற்றத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ், மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் பாஸ்கர், செம்புலிங்கம், சாருக்க்ஷா, கார்த்திகேயன், சத்தியபிரியா, ராஜசேகர், அமுதா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.'போக்சோ சட்டம்' குறித்து மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில் பேசுகையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் எழும்போது, காவல்துறை அதிகாரிகள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் மீது, போக்சோ சட்டப்பிரிவில், வழக்குப் பதிவு செய்ய வேண்டும். 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை குறித்த புகாரில் சிக்கியவருக்கு, முன்ஜாமின் வழங்க சட்டத்தில் இடம் கிடையாது. மேலும், போக்சோ சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், குற்றவாளிக்கு துாக்கு அல்லது ஆயுள் தண்டனை வழங்க சட்டம் வழி வகை செய்துள்ளது என குறிப்பிட்டார்.முன்னதாக, டி.ஐ.ஜி., சந்தோஷ்குமார், குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X