மாவட்டத்தில் 91 மையங்களில் இன்று டி.என்.பி.எஸ்.சி., தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 91 மையங்களில் இன்று டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், 91 மையங்களில் இன்று டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடக்கிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- 2 (குரூப்-2) பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு இன்று நடக்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 91 மையங்களில், 25 ஆயிரத்து 489 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வை கண்காணிக்கும் பணியில், சப்-கலெக்டர் நிலையில், பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு மையத்திற்கு, விண்ணப்பதாரர்கள் செல்வதற்கு வசதியாக, அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையம் மற்றும் தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு, 04146- 223264 மற்றும் 223268 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X