கடலூர், புதுச்சேரி, நாகையில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலூர், புதுச்சேரி, நாகையில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்:கடலுார் துறைமுகத்தில் துார புயல் முன்னெச்சரிக்கை 1ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே 1,350 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது.இந்த புயல் சின்னம் காரணமாக, கடலுார் துறைமுகத்தில் துார புயல் முன்னெச்சரிக்கை 1ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.புதுச்சேரிபுதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்க கடலில், அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், காற்று பலமாக வீச துவங்கி உள்ளது.இதையடுத்து, துாரத்தில் புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில், புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, நேற்று மாலை ஏற்றப்பட்டுள்ளது.நாகைஇதையடுத்து நாகை,துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்-1 ஏற்றப்பட்டுள்ளது.மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடன் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X