சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை சம்பவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை சம்பவம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கொள்ளையர்கள் நடித்துக்காட்டியது வீடியோவில் பதிவுவிருத்தாசலம்:சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் 5.78 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் கொள்ளையை அரங்கேற்றியது எப்படி என்பது குறித்து நடித்துக்காட்டிய காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.கடந்த 2016ம் ஆண்டு, ஆகஸ்ட் 8ம் தேதி, சேலம் அதன் சுற்றுப்பகுதி வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பழைய மற்றும் கிழிந்த 325 கோடி ரூபாய் நோட்டுகள், 169 மரப்பெட்டிகளில் அடைத்து, சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம், சென்னை ரிசர்வ் வங்கிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், ரயில் பெட்டியின் மேற்கூரையை துளையிட்டு, 4 மரப் பெட்டிகளில் இருந்த 5.78 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதில், மின்பாதை இல்லாத சேலம் - விருத்தாசலம் இடையே கொள்ளை சம்பவம் நடந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 2 ஆண்டுகளாக துப்பு கிடைக்காத நிலையில், அமெரிக்காவின் நாசா விண்வெளி மைய உதவியுடன், அதன் செயற்கைக்கோள் அனுப்பிய படங்கள் மூலம் விசாரணையை தீவிரப்படுத்தியது.அதில், சம்பவ இடங்களில் பதிவான மொபைல் எண்களில் சந்தேக நபர்களின் பேச்சுகளை பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது, மத்திய பிரதேச மாநிலம், பார்தி இன கொள்ளையர்கள் என தெரிய வந்தது. அதன்படி, கொள்ளை கும்பல் தலைவன் மோஹர் சிங், ருசி பார்தி உட்பட 11 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துனர்.இந்நிலையில், குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர்கள் கொள்ளையடித்த பணம் எங்கு உள்ளது, ரயில் பெட்டியை எப்படி துளையிட்டனர் போன்ற விபரங்களை விசாரித்து வந்தனர். அடுத்த கட்டமாக, ரயிலில் இருந்து கொள்ளையடித்த பணத்தை எவ்வாறு எடுத்துச் சென்றனர் என்பதை வீடியோ மூலம் பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.அதன்படி, விருத்தாசலத்தில் இருந்து சேலம் ரயில் நிலையம் வரை சம்பவ இடங்களில் முக்கிய குற்றவாளிகள் ஐந்து பேருடன், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வீடியோ பதிவு செய்தனர். அதில், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 6:15 மணியளவில், 2 பொலிரோ ஜீப், 1 டெம்போ டிராவலர் வேனில் வந்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், குற்றவாளிகளை ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் நடைமேடை எண்.1க்கு அழைத்து வந்தனர்.அங்கு, ரயிலில் இருந்து இறங்கியது, பணத்தை கடத்திச் சென்றது குறித்து அவர்களை நடித்துக் காண்பிக்க வைத்து, வீடியோ பதிவு செய்தனர். அதேபோன்று, நடைமேடை எண்.1 அருகே செல்லும் காட்டுப்பகுதி, சேலம் ரயில் பாதை அருகே உள்ள வயலுார் மேம்பாலம் வழியாக குற்றவாளிகளை அழைத்துச் சென்று, பதிவு செய்தனர்.அதைத் தொடர்ந்து, விருத்தாசலம் - சேலம் ரயில் பாதையில் உள்ள முகாசபரூர், சின்னசேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள், ரயில் பாதைகளில் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X