ண ராமேஸ்வரம் வியாபாரிகள் ண கோவை விரைவு பஸ் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ண ராமேஸ்வரம் வியாபாரிகள் ண கோவை விரைவு பஸ் ரத்து

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ராமேஸ்வரம், ராமேஸ்வரம்- கோவை அரசு விரைவு பஸ்சை நவ.,12 முதல் ரத்து செய்வதால் கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.ராமேஸ்வரத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சிக்கு தினமும் 2 டன் மீன்களும், கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு எலக்ட்ரிக்கல் பொருள்களும் வருகின்றன. மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் கோவை கல்லுாரியில் படிக்கின்றனர். இளைஞர்கள் மில்லில் வேலை பார்ப்பதால் இரு நகருக்கும் வணிகம், கல்வி ரீதியாக அதிக தொடர்பு உள்ளது.இதனால் ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடியில் இருந்து தினமும் ஏராளமான வியாபாரிகள், இளைஞர்கள் கோவை செல்ல, ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 7:00 மணிக்கும், கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இரவு 9:00 மணிக்கும் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்சில் (சொகுசு இருக்கை) 410 ரூபாய் கட்டணத்தில் பயணித்து பயனடைந்தனர்.ஆனால் நவ.,12 முதல் ராமேஸ்வரம்-கோவை வழித்தடம் செல்லும் விரைவு பஸ்சை ரத்து செய்வதாக பஸ் ஊழியர்கள் கூறியதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து ராமேஸ்வரம் மீன் வியாபாரி ரோஸ்பாண்டி,50, கூறியதாவது:ராமேஸ்வரம்-கோவை செல்லும் விரைவு பஸ்சில் தினமும் அதிக கூட்டம் இருக்கிறது. அரசுக்கு அதிக வருவாய் வந்த நிலையில், திடீரென விரைவு பஸ்சை நிறுத்துவதால் வியாபாரிகள், மாணவர்கள், பெற்றோர் பாதிக்கப்படுவார்கள். ஆம்னி பஸ்சுக்கு சாதகமாக...ராமேஸ்வரம்-கோவை செல்லும் தனியார் ஆம்னி பஸ்சுக்கு சாதகமாக உயர் அதிகாரிகள் செயல்பட்டு விரைவு பஸ்சை நிறுத்த உள்ளனர். எனவே புனித நகரில் இருந்து கோவைக்கு தொடர்ந்து விரைவு பஸ் இயக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக பொதுமேலாளர் கூறுகையில், நவ.12 முதல் ராமேஸ்வரம்-கோவை, கோவை-ராமேஸ்வரம் விரைவு பஸ் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. இது தவறான தகவல், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X