இலவச திட்டங்களால் உயர்கல்வித்தரம் உயர்ந்துள்ளது: முதல்வர் பழனிசாமி பெருமிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலவச திட்டங்களால் உயர்கல்வித்தரம் உயர்ந்துள்ளது: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

Added : நவ 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை:''இலவச திட்டங்களால், உயர்கல்வித்தரம் உயர்ந்துள்ளது,'' என, தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:அ.தி.மு.க.,வால் உருவாக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள், ஆட்சிக்கு துரோகம் செய்தனர். அவர்களுக்கு இறைவன் தக்க பாடம் அளித்துள்ளார்.சட்டரீதியாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான், 'ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும்' என்ற கோப்பு கவர்னரிடம் உள்ளது. அமைச்சரவையில் கூடி முடிவெடுத்து, அது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும்.

தி.மு.க., அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியாக இருக்கிறது. நாங்கள் அப்படிஇல்லை. தமிழகத்துக்கு யார் ஆதரவாக இருக்கின்றனரோ, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். எதிர்ப்பவர்களை எதிர்க்கிறோம். தமிழகத்தின் உரிமையை காக்கவும், திட்டங்களை பெறவும் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம்; கூட்டணி கிடையாது.

ஆந்திராவில் பாலாற்றின் குறிக்கே 20 தடுப்பணைகளுக்கும் மேலாக கட்டினர். பாலாறு வறண்டு விட்டது. ஒரு வார்த்தை கூட தி.மு.க.,வினர் சந்திரபாபு நாயுடுவிடம் கேட்கவில்லை.'சர்கார்' பட காட்சிக்கு அ.தி.மு.க., மட்டுமல்ல, பொதுமக்களும் சேர்ந்து தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கமலுக்கு 64 வயதாகி விட்டது; சினிமாவில் நடித்து ஓய்வு பெற்று விட்டார். மக்களும் கண்டு கொள்ளவில்லை. இப்போது, அரசியலில் நாடகம் நடித்துக் கொண்டிருக்கின்றார்; இது எடுபடாது.

விலையில்லா பொருள், தமிழகத்தில் 1.84 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது; ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களும் வசதியுள்ளவர்களும் பயன்படுத்தும் பொருளை பயன்படுத்துகின்றனர். 'சர்கார்' பட இயக்குனர் முருகதாஸ் உறவினர்களும் கூட இதை வாங்கியுள்ளனர். விலையில்லாத பொருட்கள், இலவச கல்வியால், தமிழகத்தில் உயர்கல்வித்தரம் உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-201808:52:15 IST Report Abuse
ஆப்பு இலவசக் கல்வியால்.உயர்கல்வித் தரம் உயர்ந்துள்ளது. அப்பிடியே இலவச வேலைவாய்ப்பு குடுங்களேன்...புண்ணியமா போகும். சத்துணவு ஆயா வேலையிலிருந்து துணைவேந்தர் வேலை வரைக்கும் ரேட் போட்டு காசு வாங்குறீங்களே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X