ஹிமாச்சலில் கல்லெறி திருவிழா அரச குடும்பத்தினர் பங்கேற்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஹிமாச்சலில் கல்லெறி திருவிழா அரச குடும்பத்தினர் பங்கேற்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிம்லா:பொது இடங்களில் மக்கள் மீது கல்லெறிவது குற்றமாக கருதப்படும் நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநில கிராமத்தில், மக்கள் ஒருவர் மீது மற்றவர் கற்களை வீசும், கல்லெறி திருவிழா நடந்துள்ளது.
இந்த விழாவில், அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.ஹிமாச்சல பிரதேசம், சிம்லா மாவட்டத்தில் உள்ள, தாமி கிராமத்தில், தீபாவளிக்கு அடுத்த நாள், காளி தேவியின் அருளை பெற, கல்லெறி திருவிழா நடத்தப்பட்டது.இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறியதாவது:முன் காலத்தில், காளி தேவியின் அருளை பெற, மனித உயிர் பலி கொடுக்கப்பட்டது.

400 ஆண்டுகளுக்கு முன், தாமி கிராமத்தை ஆண்ட ராணி ஒருவர், மனித பலிக்கு பதில், இரண்டு சமுதாயத்தினர் காற்றில் கற்களை வீச வேண்டும் என்றும், அந்த கற்கள் யார் மீது பட்டு ரத்தம் வருகிறதோ, அந்த ரத்தத்தால் காளி தேவிக்கு திலகமிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். கடந்த, 8ம் தேதி, கல்லெறி திருவிழா துவங்கி சிறப்பாக நடந்தது. இதில் பங்கேற்றால், காளி தேவியின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், ஏராளமானோர் கலந்து கொண்டனர். கல்லெறி திருவிழாவில், ஹிமாச்சலை சேர்ந்த அரச குடும்பத்தினரும் பங்கேற்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X