தாளவாடியில் சாணியடிக்கும் வினோத திருவிழா கோலாகலம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாளவாடியில் சாணியடிக்கும் வினோத திருவிழா கோலாகலம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தாளவாடியில் சாணியடிக்கும் வினோத திருவிழா கோலாகலம்

சத்தியமங்கலம்:தாளவாடி மலைப்பகுதியில், சாணியடிக்கும் வினோத திருவிழா, வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், தாளவாடி மலையில், கும்டாபுரம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது, இங்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்த, மூன்றாம் நாளில் சாணியடிக்கும் விழா நடக்கும். நடப்பாண்டு விழா, நேற்று முன்தினம் நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் காலை, 11:௦௦ மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, ஊரில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் மாட்டு தொழுவங்களில், பசுஞ்சாணம் சேகரிக்கப்பட்டது.இது, கோவிலின் பின்புறம் குவிக்கப்பட்டது. மதியம், 2:௦௦ மணிக்கு, குளத்திலிருந்து தாரை தப்பட்டை முழங்க, கழுதை மீது ஒருவரை அமர வைத்து, கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட பீரேஸ்வரருக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து சிறுவர் மற்றும் வாலிபர்கள், 100க்கும் மேற்பட்டோர், கோவிலுக்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை, உருண்டைகளாக செய்து, ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டனர். வினோத விளையாட்டு, ஒரு மணி நேரம் நடந்தது.அதன் பின் அனைவரும், குளத்தில் நீராடி, பீரேஸ்வரரை வழிபட்டனர். திருவிழா முடிந்தவுடன் இச்சாணத்தை, விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும் என்று, மக்கள் நம்புகின்றனர். தாளவாடி சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X