கடலுார் போக்குவரத்துக்கழக பணிமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: கலெக்டர் அதிரடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் போக்குவரத்துக்கழக பணிமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: கலெக்டர் அதிரடி

Added : நவ 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கடலுார் போக்குவரத்துக்கழக பணிமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: கலெக்டர் அதிரடி

கடலுார்:டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்தாத கடலுார் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு கலெக்டர் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.கடலுார் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை செய்ததில் தினமும் 6 முதல் 8 நோயாளிகளுக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.இதனால் அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு மேல் சிகிச்சைக்காக செல்பவர்கள் சிகிச்சை பலனின்றி பலியாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.டெங்கு கொசுவை ஒழிக்க கலெக்டர் அன்புச்செல்வன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு அலுவலகங்கள், வீடுகள், பள்ளி, கல்லுாரிகள் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.நேற்று காலை கலெக்டர் கடலுார் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்குச் சென்று, அங்கிருந்த குடிநீர் தொட்டி, கழிவறை ஆகியவற்றை ஆய்வு செய்து சுத்தமாகவும், தண்ணீர் தேங்காமலும் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.பணிமனையில் பொருட்கள் ஆங்காங்கே கிடப்பதை பார்த்து, டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என அதிருப்தி அடைந்தார். மேலும், கொசு உற்பத்திக்கு காரணமான பொருட்களும், அதில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாகும் நிலை இருந்தது.அதையொட்டி டெங்கு கொசு உற்பத்தியை ஒழிக்க பராமரிக்க தவறியதற்காக அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு கலெக்டர் அன்புச்செல்வன் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-201819:26:01 IST Report Abuse
ஆப்பு காமெடி பீஸ் நியூஸ். அபராதத்தை யார் வூட்டு பணத்திலேருந்து கட்டுவாங்க? அங்கே வேலை பார்க்கும் தலைங்க நாலு பேரை பணிநீக்கம் செஞ்சா பலன் தெரியலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X