பா.ஜ.,வுக்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம் : சந்திரபாபு நாயுடு அழைப்பு| Dinamalar

பா.ஜ.,வுக்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம் : சந்திரபாபு நாயுடு அழைப்பு

Added : நவ 11, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பா.ஜ., சந்திரபாபு நாயுடு, மெகாகூட்டணி, ஆலோசனை கூட்டம்

அமராவதி : நவம்பர் 22 ம் தேதி நடக்கும் பா.ஜ.,வுக்கு எதிரான, பா.ஜ., அல்லாத எதிர்க்கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ளுமாறு ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
பா.ஜ.,வுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு இறங்கி உள்ளார். இதற்காக கடந்த சில வாரங்களாக அவர் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து, கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்து வருகிறார். கடந்த வாரம் காங்., தலைவர் ராகுல், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவகவுடா ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து நவ., 9 ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினையும், நேற்று (நவ.,10) ஆந்திர தலைநகர் அமராவதியில் காங்., பொதுச் செயலாளர் அசோக் ஜெலட்டையும் சந்தித்தார்.
அசோக் ஜெலட்டை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, பா.ஜ.,வுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் எங்களுடன் இணையும்படி கேட்டுக் கொள்கிறேன். பா.ஜ., வுக்கு எதிரான அணியை உருவாக்க விரும்புகிறோம். அதற்காக டில்லியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். பல்வேறு பிரச்னைகள், அதனை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் வகுப்பது, அவற்றை முன்னெடுத்து செல்வது குறித்து ஆலோசிக்க உள்ளோம். நவ.,22 ம் தேதி டில்லியில் உள்ள ஆந்திரா பவனில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா
12-நவ-201802:52:16 IST Report Abuse
அருண் பிரகாஷ் மற்றவர்களின் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டும் கட்சிக்கு எதிராக ஊழல் பண்ணும் கட்சிகளின் கூட்டணி..
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
11-நவ-201815:33:57 IST Report Abuse
தமிழ் மைந்தன் சிரிப்பு கூட்டணி என நினைக்கவில்லை.நாயுடு அவர்கள் நல்ல சிந்தனையாயராக இருந்தார் மாநில வளர்ச்சி நிதிக்கு கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டது பாஜக வின் தவறு........ அதற்காக நோட்டோவுக்கு கீழ் உள்ள தமிழக பாஜக விற்கு எதிராக கூட்டணி என்ற ஸ்டாலின் அறிக்கை காமெடி. .........
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
11-நவ-201814:38:53 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா சந்திரபாபு 'நாயுடு' ஸ்டாலின புகழ்ந்துட்டாருன்னு பெருமையா சொல்லிக்கலாம். ஆந்திரா டிராவிட லிமிட்ல வராது.. அப்படித்தானே உபி ஸ் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X