மரக்கன்றுகள் நட விவசாயிகள் போர்க்கொடி: போலீஸ் தடுத்ததால் சாலை மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் நட விவசாயிகள் போர்க்கொடி: போலீஸ் தடுத்ததால் சாலை மறியல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேலம்: எட்டு வழிச்சாலை பகுதியில், மரக்கன்றுகள் நட, போர்க்கொடி தூக்கிய விவசாயிகளை, போலீசார் தடுத்ததால், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் - சென்னை, எட்டு வழிச்சாலைக்கு மரங்கள் வெட்டப்பட்டதற்கு ஈடாக, மரக்கன்றுகள் நட நீதிமன்றம் உத்தரவிட்டும், மாவட்ட நிர்வாகம் தரப்பில், நடவடிக்கை இல்லையென புகார் எழுந்துள்ளது. அதனால், எட்டுவழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினர், நேற்று காலை, 11:00 மணிக்கு திரண்டனர். தொடர்ந்து, அயோத்தியாப்பட்டணம் அருகே, ஏரிக்காடு, மாரியம்மன் கோவில் பகுதியில், மரக்கன்றுகள் நட முயன்றனர். ஏ.டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில், 50 போலீசார் குவிக்கப்பட்டனர். மரக்கன்றுகள் நட அனுமதியளித்த, கோவில் தர்மகர்த்தா துரைசாமி, போலீஸ் நடவடிக்கையால், பின் மறுத்துவிட்டார். இதனால், அங்குள்ள ஏரி, அதன் கரைப்பகுதி மற்றும் ஊராட்சி சாலையோரங்களில், மரக்கன்றுகள் நட விவசாயிகள் முயன்றனர். வாழப்பாடி தாசில்தார் வள்ளிதேவி, அனுமதியின்றி, மரக்கன்றுகள் நட தடை விதித்தார். ஆத்திரமடைந்த விவசாயிகள், 11:30 மணிக்கு, நொச்சிப்பட்டி சாலையில், மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, நகராதபடி கயிறுகட்டி, போலீசார் நெருக்கடி கொடுத்ததால், இரண்டுமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, 'ஐந்து நாட்கள் அவகாசம் கொடுத்தால், மரக்கன்றுகள் நட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, வள்ளிதேவி தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் நெருக்கடியை தளர்த்தினர். அந்த சந்தர்ப்பத்தில், விவசாயிகள், 10 மரக்கன்றுகளை, ஊராட்சி சாலையோரம் நட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X