'பள்ளி மாணவி கொலை வழக்கு: விசாரணை ஆணையம் அவசியம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பள்ளி மாணவி கொலை வழக்கு: விசாரணை ஆணையம் அவசியம்'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி, சுந்தரபுரத்தை சேர்ந்த, 13 வயது மாணவியை, கடந்த, அக்., 22ல், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் கொலை செய்தான். நேற்று, இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாணவியை திட்டமிட்டு, தினேஷ்குமார் குடும்பத்தினர் கொலை செய்துள்ளனர். மனைவி, சகோதரரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்த வழக்கு நீர்த்துபோவதற்கான முயற்சி நடக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்; மாணவியின் குடும்பத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம், 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும். கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது ஏன், இவர் இலவச திட்டத்தை எதிர்க்கவில்லை. 'சர்கார்' படம் புரிதல் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த, தனியார் கல்லூரியில் படிக்கும், தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதை, மீண்டும் செயல்படுத்தக்கோரி, இரு ஆண்டுகளாக போராடி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X