அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்: மேச்சேரி, 11வது வார்டு, லாவண்யா தியேட்டர் பின்புறம், சாலை இருபுறமும், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. சாலையோரம், மழைநீர் வடிகால் கிடையாது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அருகிலுள்ள காலி நிலத்தில் குட்டை போல், பல மாதங்களாக தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. அதில், கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதால், மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்குவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளமான சாலை; மக்கள் கவலை: சங்ககிரி, உத்திரகாந்தமலையில் இருந்து, மலையாண்டான்காடு வழியாக, நாட்டாம்பாளையம் செல்லும் சாலையில், ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, இரவில் செல்வோர், தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து, பேரூராட்சி அலுவலகத்தில், மக்கள் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.

வீணாகும் குடிநீர்; நடவடிக்கை தேவை: ஓமலூர், பாகல்பட்டி, அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு அடங்கிய, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதிலிருந்து, குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினியோகிக்கும் இரும்பு குழாய் துருப்பிடித்து ஓட்டை விழுந்து, தண்ணீர் வெளியே சிந்தியபடி உள்ளது. ரப்பர் கொண்டு, தண்ணீ வெளியேறாமல் தற்காலிகமாக தடுத்துள்ளனர். ஆனால், 'கேட் வால்வு' பகுதியிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறது.

துணை சுகாதார நிலையத்துக்கு பூட்டு: சங்ககிரி, ஆலத்தூர்ரெட்டிபாளையத்திலுள்ள, துணை சுகாதார நிலையத்தில், வாரம் ஒருமுறை செவிலியர் வந்து, நோயாளிகளுக்கு மாத்திரை, மருந்து வழங்குகிறார். மற்ற நாட்களில் பூட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள், முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். இரவில், உடல் நலக்குறைவு ஏற்பட்டால், 10 கி.மீ., தூரமுள்ள சின்னாக்கவுண்டனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பயனற்ற தொட்டியை இடிக்க வேண்டும்: தலைவாசல், தேவியாக்குறிச்சி, இந்திரா நகர் காலனியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பாழடைந்தததால், அருகே, புதிதாக கட்டப்பட்ட தொட்டி பயன்பாட்டில் உள்ளது. ஆனால், பழைய தொட்டியை இடித்து அகற்றவில்லை. அதில், கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வருகின்றன. அங்கு, சிலர் இரவில், மது அருந்தி வருகின்றனர். சிறுவர்கள், ஆபத்தை அறியாமல் உள்ளே நுழைந்து விடுகின்றனர். அப்போது, தொட்டி கட்டடம் இடிந்து விழுந்தால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X